Categories
உலக செய்திகள்

உலகத்திலேயே இதுதான் ரொம்ப பெருசு …. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மணல் கோட்டை ….!!!

டென்மார்க் நாட்டில் கட்டப்பட்ட மணல் கோட்டையானது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை  படைத்துள்ளது.

டென்மார்க்கில் ப்ளொகஸ் கடல் நகரில் உலகிலேயே மிக உயரமான முக்கோண வடிவமைப்புக் கொண்ட மணல் கோட்டை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மணல் கோட்டையை  உலகின் மிகச்சிறந்த மணல் சிற்பிகளில் ஒருவரான டச்சு படைப்பாளர் வில்பிரட் ஸ்டிஜர் வடிவமைத்துள்ளார். இந்த மணல் கோட்டையானது சுமார்  21.16 மீட்டர் உயரத்தையும் , 4,860 டன் மணலாலும்  கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெர்மனியில்  பெரிய கட்டப்பட்ட 17 .66 மீட்டர் உயரம் கொண்ட மணல் கோட்டை உலகில் பெரிய மணல் கோட்டையாக சாதனை படைத்தது.

ஆனால் இந்த சாதனையை டென்மார்க் மணல் கோட்டை முறியடித்துள்ளது. இந்த டென்மார்க் மலைக்கோட்டை ஜெர்மனி மனக் கோட்டையை விட 3.5 மீட்டர் அதிக உயரம் கொண்டுள்ளது. இதனால் தான்  உலகிலேயே மிக உயரமான மணல் கோட்டை என்ற சாதனையை படைத்துள்ளது. இதையடுத்து இந்த மணல் கோட்டையை  கட்டுவதற்கு 30 பேர் உதவி செய்துள்ளனர். மேலும்  கொரோனா வைரஸ் தொற்றை  குறிக்கும் வகையில் இந்தக் கோட்டையின் உடைய மேல் கிரீடம் அணிந்த வைரஸின் மாதிரியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மணல் கோட்டை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த மலைக்கோட்டை கட்டப்பட்ட மணலில் சுமார் 10% களிமண் இருப்பதால் இலையுதிர் மற்றும் குளிர் காலத்தில் குளிர் காற்று வீசும் நிலைமைக்கு தகுந்தவாறு இந்த கட்டிடத்தில் ஒரு விதமான பசை மேற்புறத்தில் ஒரு அடுக்காக பூசப்பட்டுள்ளது. இதையடுத்து மணல் கோட்டையில் மீன் மற்றும் கலங்கரை விளக்கம் கடற்கரை வீடுகள்  இணைக்கப்பட்டிருப்பதால்  ப்ளோகஸின் பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டிடம் அடுத்த பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நிலவும் கடுமையானஉறைபனி காலம்வரை நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்தக் கட்டிடம் பார்வையாளர்கள் கானா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |