இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள், அதிகளவு காணப்படுகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்தத தொடர்களிலும் ,அடுத்தடுத்து வென்று அதிரடி காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான புஜாரா, உலகில் எந்த ஒரு இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் திறமை இந்திய அணிக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள், அனைவரும் சிறந்த பலத்துடன் உள்ளனர். அவர்களுடைய பந்துவீச்சை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம், என்பதால் எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஐடியா எங்களிடம் உள்ளது. கடந்தமுறை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடி இருந்தோம். ஆனால் இந்த முறை இரண்டு அணிகளும் பொதுவான இடத்தில் விளையாட இருப்பதால், எந்த அணிக்கும் சாதகமாக இருக்காது .எங்களுடைய அடிப்படையை நாங்கள்சரியாக அமைத்துவிட்டால் உலகில் நடக்கும் எந்த ஒரு இடத்திலும், எந்த அணியையும் எதிர்த்து விளையாடி வெற்றி பெரும் திறமை எங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.