உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஐரோப்பிய நாடுகளே முதல் 8 இடங்களில் உள்ளன.
ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்காக உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை வாழ்க்கை மதிப்பீடு மற்றும் நல்வாழ்வு ஆகிவற்றின் அடிப்படையில் தீர்வு வலையமைப்பு ஆய்வு செய்து கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வில் இந்த ஆண்டின் மொத்தம் 146 நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க் (2), அயர்லாந்து(3), சுவிட்சர்லாந்து(4), நெதர்லாந்து(5) இடங்களையும் பிடித்துள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளான லக்சம்பர்க்(6), ஸ்வீடன்(7), நார்வே(8) ஆகிய இடங்களில் உள்ளன. இதனை தொடர்ந்து இஸ்ரேல்(9), நியூசிலாந்து(10) இடங்களிலும் கடைசி மூன்று இடங்களில் சிம்பாப்வே, லெபனான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.