உலகிலேயே அதிக கொரோனா பரவல் உள்ள இடமாக லண்டனில் யூதர்கள் வசிக்கும் பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள Stamford Hill என்ற பகுதியில் யூத ஆர்த்தடாக்ஸ் சமூகத்தினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டது இந்த பகுதி தான் என்று ஒரு ஆய்வில் அறிக்கை வெளியாகி உள்ளது . 15,000 யூதர்கள் வசிக்கும் இந்த பகுதியில் மூன்றில் ஒன்று என்ற விகிதத்தில் கொரானா பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு வசிக்கும் மக்களில் 75% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படும். அதில் Stamford Hill-ம் ஒன்று என ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கிடையே யூதர்களின் முக்கிய திருவிழா ஒன்று நெருங்கி வருகிறது.
இதனால் Stamford Hill-ல் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் இதனை தடுக்க தலைவர்கள் முக்கிய முடிவுகள் எடுத்து வருகின்றனர். கூட்டுக்குடும்ப முறை, நோய்வாய்ப்பட்ட நிலை போன்ற காரணங்களால் Stamford Hill பகுதியில் வசிக்கும் யூத சமூகத்தினர் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூக விலகல் என்பது யூதர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.