உலகின் மிகப் பெரிய அளவிலான Ever Ace கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது.
உலகிலேயே பெரிய அளவிலான சரக்கு கப்பலாக Ever Ace விளங்குகிறது. தற்போது இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு Ever Ace கப்பல் வந்து சேர்ந்துள்ளது. மேலும் Ever Ace கப்பலானது 400 மீட்டர் நீளத்தையும் மற்றும் 62 மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கப்பல் ஆனது 23,992 கண்டெயினர்களை ஏற்றிகொண்டு செல்லும் திறன் கொண்டதாகும்.
இந்த நிலையில் Ever Ace கப்பலானது, எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். இதனையடுத்து கடந்த மாதம் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து Ever Ace கப்பல் புறப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதகால பயணத்திற்கு பின் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது.
உலகளவில் 24 துறைமுகங்கள் Ever Ace போன்ற மிகப்பெரிய கண்டெயினர்கள் கொண்ட கப்பல்களை கையாளும் வசதிகள் கொண்டுள்ளன. இருப்பினும் தெற்கு ஆசியாவிலேயே நங்கூரம் இடக்கூடிய ஒரே துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.