Categories
தேசிய செய்திகள்

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை – பிரதமர் திறந்து வைக்கிறார்…!!

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இமாச்சலபிரதேச மாநில மணாலியில் இருந்து லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை உலகிலேயே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கப் ஆகும். 10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கிலோமீட்டர் குறைப்பதுடன், நான்கு மணி நேர பயண நேரம் சேமிக்கப்படும். அடல் என பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்க பாதையில் ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதையை இன்று காலை 10 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

Categories

Tech |