கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைவிட ஆபத்தான எபோலா என்ற நோய் தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக பிரபல நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கினியா நாட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எபோலா தொற்று நோய் பரவுவதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எபோலா நோய் கடந்த 2013- 2016 க்கு இடையில் கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது இந்த நோயால் ஏறக்குறைய 11,323 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நோயின் அறிகுறி கினியாவில் ஒரு செவிலியரின் இறுதிசடங்கில் கலந்து கொண்ட பலருக்கும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை ஏழு பேருக்கு எபோலா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டதாக கினியாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதில் நால்வர் தனிமைப்படுத்துதலில் இருப்பதாகவும் ஒருவர் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பியதாகவும் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை சிகிச்சை பலனின்றி 3 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது .இந்த எபோலா வைரஸ் தொடர்பாக அரசுக்கு உலகமெங்கும் உள்ள தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.