Categories
Uncategorized

உலககோப்பை கால்பந்து 2022: இதுவே கடைசி… விடை பெற இருக்கும் 5 அனுபவ சிங்கங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்த FIFA உலக கோப்பை பல கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலக கோப்பையாகவும் உள்ளது. இந்த சூழலில் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலக கோப்பை 2022 தொடருடன் ஓய்வு பெறப்போகும் முக்கியமான ஐந்து கால்பந்து வீரர்களின் பட்டியலை பார்ப்போம். அதன்படி முதலில் லியோனல் மெஸ்ஸி என்ற பெயர் உலக கால்பந்து ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவர் எல்லா காலத்திலும் மிக சிறந்த வீரர்களின் ஒருவர். மெஸ்ஸிக்கு 35 வயது என்றாலும், இன்னும் 19 வயது இளைஞர்களை போல சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது வேகம் மற்றும் சுறுசுறுப்பான ஆட்டம் பார்ப்போரை எளிதில் கவரும். இவருக்கு FIFA உலக கோப்பை 2022 தொடர் தான் கடைசி உலக கோப்பை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதனைப் போல உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவர் ஆவார். சமீபத்தில் இவர் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 700 கோல்களை எடுத்து முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதனை போல உலக கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக ரொனால்டோ அடித்த ஃபிரீ-கிக் கோலை யாராலும் மறந்து விட முடியாது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கும். அதனை தொடர்ந்து‌ செர்ஜியோ ராமோஸ் கார்சியா ஸ்பானிஷ் தொழில் முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் லிகு 1 கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் தேசிய அணியாக விளையாடி வருகிறார். இதுவரை இவர் 16 சீசன்கள் ரியல் மாற்றி அணிக்காக விளையாடி, இரண்டு யுஇஎஃப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டங்களுடன், நான்கு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஸ்பெயின் அணிக்காக நான்கு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஒரு 2010 ஃபிஃபா உலகக் கோப்பையையும் வென்றார். இவருக்கும் 2022 ஃபிபா உலகக் கோப்பைதான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். இவருக்கும் 2022 உலக கோப்பை தான் கடைசி உலக கோப்பையாக இருக்கும்.

அதன் பிறகு மானுவல் பீட்டர் நியூயர் ஒரு ஜெர்மன் தொழில் முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் சர்வதேச விளையாட்டு அரங்கில் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியோனா ரொனால்டோ ஆகியோருக்கு பின்னால் FIFA Ballon d’or விருதுக்கான வாக்களிப்பில் நியூயர் மூன்றாவது இடத்தை பிடித்தார். இவருக்கும் 2022 உலக கோப்பை கால்பந்து கடைசியாக இருக்கும். இறுதியாக லூகா மோட்ரிக் ஒரு குரோஷிய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் ல லிகா கிளப் ரியல் மாட்ரிட்டின் மிட்பில்டராகவும், குரேஷியோ தேசிய அணியின் கேப்டன் ஆகவும் உள்ளார். 2007 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு இடையில் 10 முறை குரோஷியாவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் 2022 FIFA உலக கோப்பை இறுதியாக இருக்கும்.

Categories

Tech |