Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பை மறைத்து காட்டிய சீனா….. உலக நாடுகள் குற்றச்சாட்டு!

சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக 1,290 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இதனை கடுமையாக விமரிசித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளிலேயே சீனாவில் தான் கொரோனா இறப்பு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார். திடீரெனெ உயிரிழப்பு அதிகரிப்பது குறித்து சீன அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் அரசும் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை சீன அரசு முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டதே இந்த குழப்பத்திற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வூகான் நகரில் சுகாதாரத் துறையால் விரைந்து செயல்பட முடியவில்லை. கொரோனா பாதித்து வீடுகளிலேயே உயிரிழந்தவர்கள் கணக்கில் வரவில்லை.

நோயாளிகளை கவனிப்பதில் மருத்துவ பணியாளர்கள் கவனம் செலுத்தியதால், அவர்களால் பாதிப்பு விவரங்களை முழுமையாக வழங்க முடியவில்லை. வூகான் நகரத்தில் செயல்பட்ட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து தகவல்கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, குறித்த நேரத்தில் நோய் பாதிப்பு விவரங்கள் சமர்பிக்கப்படவில்லை. தற்போது குழப்பத்திற்கு இது தான் கரரணம் என உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |