Categories
உலக செய்திகள்

உலகில் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்களில்…. டெல்லி முதலிடம்… பெரும் அதிர்ச்சி…!!

இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை வாய்ந்த மாசடைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளது இந்த ஆய்வின் முடிவு…. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இதில் முதலிடம் பெற்றுள்ளது….

இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை சூழ்ந்துள்ள ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆய்வு செய்தபோது 30 நகரங்கள் மிகவும் மாசடைந்த நகரங்களாக கண்டுபிடிக்கப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும், உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரமாக டெல்லி முன் நிற்கின்றது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் அமைப்பான ஐ.க்யூ ஏர் என்கிற அமைப்பு, புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அந்த ஆய்வின் படி, புதிய அறிக்கையை அந்த அமைப்பு தயாரித்து வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையின் போது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, டெல்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 18 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றன. இந்தியாவின் தலைநகரமான டெல்லி முன்னேற்றம்  இருந்தபோதிலும், ஆனால் மாசுபாட்டில் 10வது இடத்தில் உள்ளது என்பது வேதனைக்குரியதாகும். இதனால் டெல்லி மாசுபட்ட தலைநகரம் என்ற பெயரினை பெற்றுள்ளது. இதுகுறித்து ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, “அதிக அளவில் மாசுபட்ட நகரங்களின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், பின்பு உலக அளவில் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் இந்தியாவில் இருப்பதாகவும்” இந்த ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து, தொழில்சாலை, கட்டுமானம் தொழில், கழிவுகளை எரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல், சமையல் எரிவாயு புகை, மின்சார உற்பத்தி போன்றவற்றை முக்கிய காரணிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனை கட்டுப்படுத்தி இந்த மாசுபாட்டினை  தவிர்க்க வேண்டும். இத்துடன், உலகளாவிய அனைத்து நகரங்களின் தரவரிசை அறிக்கை 106 நாடுகளில் பிஎம் 2.5 தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவற்றை தரை அடிப்படையிலான கண்காணிப்பு நிலையங்களால் அளவிடப் படுகிறது என்றும், இதில் பெரும்பாலானவை அரசு நிறுவனங்களால் செயல்படுத்துகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |