Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிக மோசமான சிறைச்சாலை எது தெரியுமா …!!

பொருளாதார ரீதியில் மிகவும் ஏழ்மையான ஹைத்தி தீவு சிறைகளில் கைதிகள் எந்த அடிப்படை வசதியுமின்றி வழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடுகின்றன. அதனை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு.

ஹைத்தி தீவு கரீபியன் தீவுக் கூட்டங்களுக்கு அருகே அமைந்துள்ளது. எனினும் ஆப்பிரிக்கா கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாக விளங்குகிறது ஹைத்தி. 2010 ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் ஒட்டுமொத்த தேசமும் சிதைந்து போனது. அதன் பிறகு உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஹைத்தி இடம் பெற்றது. அங்கு மொத்த மக்கள் தொகையில் வெறும்  5 சதவீதத்தினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது. அவர்களும் நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டு டாலர் அளவிற்கே வருமானம் பெறுகின்றனர். நாளுக்கு நாள் மோசமடையும் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதனிடையே தலைநகர் போட்டோ பிரான்ஸிலுள்ள ஒரே சிறையில்  கைதிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது வெறும் 700 பேர் மட்டுமே அடைக்கப்படக்கூடிய ஒரு சிறையில் 4 ஆயிரத்து 500 சிறைக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நிலைமை படுமோசமாக உள்ளது குடிநீர், மருந்து, படுக்கை வசதி, கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது என்பது கூடுதல் அதிர்ச்சி. இதற்கு சிறை அதிகாரிகள் அளிக்கும் விளக்கம் அரசிடம் இருந்து போதிய நிதி  கிடைப்பதில்லை என்பதே பதிலாக உள்ளது. எவ்வளவு மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் முன் வருவதில்லை. என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்பது தெரியாமலேயே பல கைதிகள் சிறையில் உள்ளனர். அது மட்டுமல்ல அவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதில்லை. அப்படியே பல ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு வந்தாலும் வாதாடுவதற்கு கைதிகளிடம் பணம் இல்லை. இதனால் காரணம் தெரியாமலேயே பலர் சிறையிலேயே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு மரணம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

Congress calls for global prison reform - Effective Compassion - WORLD

வசதி மிக்க ஒருவர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் அவரை தப்பவைக்க ஹைத்தி காவல்துறை சம்பந்தமில்லாத ஒரு ஏழை குடிமகனை சிறையில் அடைத்து அவருக்கு தண்டனை வழங்குவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலநடுக்கத்தால் பெரும்பாலான அரசு கட்டிடங்கள் சிதைத்து போன நிலையில் சிறை கட்டமைப்பு மோசமடைந்துள்ளதாக ஹைத்தி அரசு விளக்கம் அளித்தாலும் காரணம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பற்றி பதில் இல்லை சிறை அதிகாரிகள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், என பலரும் பெரும்பாலான நேரங்களில் விடுப்பில் இருப்பதும் ஒரு பெரிய காரணமாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சீரழிவு அதன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள அரசின் பொருளாதாரம் என இவை இரண்டிலிருந்தும் ஹைத்தி அரசு மீண்டால் மட்டுமே அங்குள்ள சிறைக் கைதிகளுக்கும் விடிவுகாலம் என்கின்றனர் உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள்.

Categories

Tech |