டிபி புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய அதிக விலை கொண்ட காய்கறி அவுரங்காபாத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலம் காரம் கா ப்சாமத்தில் வசித்து வரும் ஆம்ரேஸ் சிங் வருங்காலத்தில் தனது விவசாய நிலத்தில் ‘ஹாப் ஷீட்ஸ் ‘காய்கறியை விளைவித்து வருகிறார் இதற்கு அம்ரேஷ் சிங் சுமார் 2.5 லட்சம் வரை முதலீடு செய்து காய்கறிகளை நல்ல முறையில் விளைவித்துள்ளார் .
மேலும் 60 சதவீத அறுவடை முடிந்து தற்போது நல்ல முறையில் விற்பனை செய்யப்பட்டது.இந்த ஹாப் ஷீட்ஸ் காய்கறியை பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டரில் அம்ரேஷ் சிங் விளைவிக்கும் ‘ஹாப் ஷீட்ஸ் ‘ காய்கறியின் பூர்வீகம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆகும்.
இக்காய்கறி உலகிலேயே மிக அதிக மதிப்புடையதாகும். ஹாப் ஷீட்ஸ் காய்கறியின் சிறப்பு டிபி நோய் குணபடுத்தும் தன்மை கொண்டதாகவும் அதில் இருக்கும் ஆசிட் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய செல்களை முற்றிலும் அழிக்கக் கூடியவை எனவும் கூறப்படுகிறது. மேலும் பீர் பானத்தின் சுவையை அதிகரிக்கக் கூடியதாகவும் அதனை நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஹாப் ஷீட்ஸ் காய்கறி ஹிமாச்சலப் பிரதேசத்தில் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போது இது குறித்து அம்ரேஷ் சிங் இதுவரை இந்த ஹாப் ஷீட்ஸ் காய்கறி பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு செய்த உதவியால் நான் விளைவித்த ஹாப் ஷீட்ஸ்க்கு நல்ல பயன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.