எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடியினர்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தானவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு இடங்களில் பல வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல வித்தியாசமான வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு எத்தியோபியா மற்றும் சூடான் எல்லையில் இருக்கும் ஓமன் பள்ளத்தாக்கு பகுதியில் பல வருடங்களாக முர்சி என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பழங்குடியினரின் மொத்த மக்கள் தொகையானது 10,000 பேர் ஆகும். இந்த பழங்குடியினர்தான் உலகிலேயே மிகவும் கொடூரமானவர்கள் என்று கூறப்படுகின்றனர்.
இவர்கள் மூட நம்பிக்கை என்ற பெயரில் பயங்கரமான பழைய நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்கள் தீய சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மரம் அல்லது களிமண்ணால் ஆன டிஸ்கை தங்களது கீழ் உதட்டில் அணிந்து கொள்வார்கள். மேலும் இந்த பழங்குடியினர் தங்கள் பகுதிக்குள் யாரேனும் அனுமதியின்றி நுழைந்தால் அவர்களை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொடூரமாகக் கொன்று புதைத்து விடுகின்றனர்.