உலகில் உள்ள ஒரு ஆறு பகுதிகளில் சூரியன் மறைவு காணப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நமது பூமியின் இயக்கம் காரணமாக தான் இரவும் பகலும் தோன்றுகிறது. ஆனால் உலகின் சில இடங்களில் சூரியன் மறைவே இருக்காதாம். மேலும் உலகில் உள்ள ஆறு இடங்களில் சூரியன் மறைவு காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. அது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் நார்வேயில் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு சூரியன் மறையாமல் இருக்குமாம். அந்த நாட்கள் அனைத்தும் வெறும் பகல் பொழுது மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்தப் பகுதியினை Land of the Midnight Sun என்று அழைக்கின்றனர். அதிலும் அங்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறைவதில்லையாம். இந்த காலத்தில் நீங்கள் சுற்றுலா சென்றால் நார்வேயில் பகல் பொழுதை மட்டும் ரசிக்கலாம். மேலும் நார்வேயில் உள்ள ஸ்வால்பார்டில் என்ற பகுதியில் ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் மறைவதில்லை என்றும் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக கனடாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே நுனாவுட் என்ற இடம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சூரியன் மறையாமல் இருக்குமாம். இதனால் வாரத்தின் ஏழு நாட்களில் 24 மணி நேரமும் பகல்பொழுதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயத்தில் குளிர் காலத்தில் 30 நாட்களுக்கு தொடர்ந்து முழுமையான இருள் பொழுதாகவே காணப்படும். இதனை தொடர்ந்து மூன்றாவது இடமாக ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவான ஐஸ்லாந்தில் இது போன்று காணப்படுகிறது. இங்கு ஜூன் மாதத்தில் சூரியன் மறைவதில்லை.
மேலும் மிட்நைட் சன் என்று கூறப்படும் நள்ளிரவு சூரியனை ரசிக்க வேண்டும் எனில் அங்குள்ள அக்குரேரி நகரம் மற்றும் கிரிம்சி தீவுக்குச் செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து அலாஸ்காவில் உள்ள பாரோ என்ற பகுதியிலும் சூரியன் மறைவு இருக்காதாம். இந்த பகுதியில் மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜூலை மாதம் இறுதி வரை பகல் பொழுது காணப்படுகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் 30 நாட்களுக்கு முழு இருளாகவே இருக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்தை ‘துருவ இரவு நேரம்’ என்று கூறிகின்றனர்.
குறிப்பாக பனி போர்த்திய மலைகள் மற்றும் பனிப்பாறைகள் இருக்கும் இந்த இடத்தை கோடை அல்லது குளிர் காலத்தில் சென்று காணலாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்குமாம். இதனை அடுத்து ஐந்தாவது பகுதியாக ஆயிரம் ஏரிகள் மற்றும் தீவுகளின் நிலம் என்று அழைக்கப்படும் பின்லாந்து சூரிய மறைவு இன்றி காணப்படுகிறது. இங்கு கோடை காலத்தில் தொடர்ச்சியாக எழுபத்தி மூன்று நாட்களுக்கு பகலாகவே இருக்கும். அதே சமயம் குளிர்காலத்தில் சூரிய ஒளி இருக்காது.
பொதுவாக இங்கு வசிக்கும் மக்கள் அதிக நேரம் விழித்திருக்கின்றனர். ஏனெனில் தொடர்ச்சியான சூரிய ஒளியினால் மக்கள் கோடை காலத்தில் குறைவாக உறங்குகின்றனர். அதே சமயத்தில் குளிர் குளிர் காலத்தில் நீண்ட இரவு பொழுதாக இருப்பதால் அப்பொழுது அதிகம் நேரம் உறங்குகின்றனர்.
இப்பட்டியலில் கடைசியாக ஸ்வீடன் நாடு உள்ளது. இங்கு மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நள்ளிரவில் தான் சூரியன் மறையுமாம். ஆனால் மறைந்த சிறிது நேரம் கழித்து அதிகாலை நான்கு மணி அளவில் மீண்டும் சூரியன் உதயமாகிறது. குறிப்பாக ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் ஸ்வீடன் முழு சூரிய ஒளியில் இருக்குமாம்.