உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், உதவிடக் கூடிய வகையிலும் கடந்த 2007ஆம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம்பெற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை கொண்ட நகரங்களில் வரிசையில் கத்தாருக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சுற்றிலாந்து நாட்டின் காற்று தரக் குறியீடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், தீபாவளி நாளில் அதிகம் மாசுடைய நகரங்களில் வரிசையில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்ததாக பட்டியலில் பாகிஸ்தான் நாகூர் நகரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த டாப் 10 பட்டியலில் தலைநகர் டெல்லி இடம்பெறவில்லை என உலக காற்று தர குறியீடு அமைப்பு தகவல் அடிப்படையாக வைத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “டெல்லியில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள் கடந்து ஆண்டு இதே நேரத்தில் 15% என இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 2 முதல் 3% அளவில்தான் குறைந்துள்ளது” என்ற தகவலை அவர் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் காற்றின் தரம் ஒட்டுமொத்த அளவில் இன்று 323 புள்ளிகளாக உள்ளது.