உளவாளி கொலை வழக்கில் ரஷ்யா உளவுத்துறை தொடர்பு இருப்பதை உறுதி செய்து ஐரோப்பியா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரஷ்யா உளவுத்துறையான கெஜிபியில் பணிபுரிந்த Alexander Litvinenko என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு லண்டன் மில்லினியம் விடுதியில் தேநீர் அருந்த சென்றுள்ளார். அங்கு அவர் தேநீர் அருந்திய சில நேரத்திற்கு பின்பு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் Andrei Lugovoy மற்றும் Dmitry Kovtun ஆகிய இருவரும் Alexander Litvinenkoவை ரஷ்ய உளவுத்துறை சார்பில் லண்டன் மில்லினியம் விடுதியில் தனிப்பட்ட முறையில் சந்திக்க வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் தான் தேநீரில் பொலோனியம் விஷம் கலந்து ரஷ்யா அரசின் சார்பில் Alexander Litvinenkoவை கொலை செய்துள்ளனர் என்று பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு உறுதியாக தெரிவித்தனர். குறிப்பாக இந்த வழக்கில் ரஷ்யா அதிபர் புதின் ஆரம்பம் முதலே செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது ரஷ்யா நிர்வாகம் சார்பில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து Alexander Litvinenkoவின் மனைவிக்கு ரஷ்யா 1,22,500 பவுண்டுகள் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இந்த கொலையில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ரஷ்யா உளவுத்துறை கூறியுள்ளது. குறிப்பாக Alexander Litvinenko கெஜிபியில் இருந்து விலகி பிரித்தானியாவில் குடியேறியுள்ளார். இதனையடுத்து பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று அந்நாட்டு உளவுத்துறையிலேயே பணிபுரிந்துள்ளார்.