உழவர் சந்தையை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு சந்தைக்கோடியூர் பகுதியில் இருக்கும் மெயின் ரோட்டில் வாரந்தோறும் புதன்கிழமை நாளன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அந்த சந்தையில் சந்தைக்கோடியூர் உட்பட பல பகுதிகளிலிருந்து அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் சந்தைக்கோடியூர் வார சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மறு உத்தரவு வரும் வரை வார சந்தையில் வியாபாரம் நடப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதன்படி வருகின்ற 26-ஆம் தேதியில் இருந்து சந்தை கோடியூர் வாரச்சந்தை வாரம்தோறும் நடைபெறாது என நகராட்சி ஆணையாளர் பழனி தெரிவித்துள்ளார்.