Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டி கிடந்த கடைகள்…. 20 லட்ச ரூபாய் நிதி…. துணை இயக்குனரின் செயல்….!!

உழவர் சந்தையில் பூமி பூஜை போட்டு பணிகளை வேளாண் துணை இயக்குனர் தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தமிழக அரசு சார்பாக உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள கடைகள் கொரனோ ஊரடங்கு காரணமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் சிமெண்ட் பூச்சிகள் விழுந்து தரைத்தளம் பள்ளம் மேடாகவும், மேற்கூரைகள் மழை காற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக அரசு உழவர் சந்தை மேம்படுத்த 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலமாக மேற்கூரைகள் மற்றும் தரைத்தளம் அமைக்கும் பணிகள் பூஜை போட்டு நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு வேளாண் துணை இயக்குனர் கே. செல்வராஜ் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |