Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக ஆடவர் டென்னிஸ் :அரைஇறுதியில் ஜோகோவிச்-ஸ்வெரெவ் மோதல் ….!!!

உலக ஆடவர் டென்னிஸ் போட்டியில் போலந்தை சேர்ந்த ஹர்காக்சை வீழ்த்திய  அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

‘டாப் 8’ வீரர்கள் மட்டும்  பங்குபெறும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயமடைந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசுக்கு பதிலாக இடம்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியும் ,நார்வே வீரரான  கேஸ்பர் ரூட்டும் மோதினர் .

இதில் 6-1, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில்  கேஸ்பர் ரூட்வெற்றி பெற்றார் . இதையடுத்து ‘ரெட்’  பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போலாந்து வீரரான  ஹர்காக்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து  நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஜோகோவிச் மோதுகின்றன .

Categories

Tech |