Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எந்த பயமும் வேண்டாம்…. பாதுகாப்பு பணியில் போலீஸ்…. சூப்பிரண்டு தகவல்….!!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 97.5 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் சுமுகமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 1,717 நபர்கள் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாதனுர் ஒன்றியத்தில் இருக்கும் நாயக்கனேரி ஊராட்சியில் மட்டுமே 100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் ஆறு சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்களிக்க வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் அனைவரும் எந்த ஒரு பயமும் இன்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம் என காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |