Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 13 வார்டு…. வாக்கு எண்ணிக்கை முடிவு…. வெற்றி அறிக்கை வெளியீடு….!!

தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கட்சியினர் 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு பகுதியிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரு பகுதியிலும் தி.மு.க கூட்டணியில் போட்டுள்ளனர்.

இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மொத்தமாக 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இம்மாவட்டத்தில் முழுவதுமாக 13 பகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சியை கைப்பற்றி இருக்கின்றனர்.

Categories

Tech |