Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்நாட்டு கிரிக்கெட் தொடர் : மீண்டும் தொடங்கும் ரஞ்சி கோப்பை …. பிசிசிஐ அறிவிப்பு ….!!!

இந்த ஆண்டு தொடங்க உள்ள  ரஞ்சிக் கோப்பை தொடரானது வருகிற  நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி  அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .

2021 2022- ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சையத்  முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் தொடர் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து ரஞ்சி கோப்பைக்கான தொடர் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதேபோல் விஜய் ஹசாரே கோப்பைக்கான 50 ஓவர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் அனைத்து ஆண்கள் , பெண்களுக்கான தொடர்களில்  2127 போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் போட்டியில் பங்குபெறும் அனைவருடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து  உள்நாட்டு சீசனுக்கான போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்று பிசிசிஐ  தெரிவித்துள்ளது.

Categories

Tech |