புதுச்சேரியில் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் மெகா அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் ரகுமான் நிருபர் என்பவர் அசைவ சாப்பாடு கடை வைத்து நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த கடை அங்கு ஓரளவுக்கு பிரபலமானது தான். இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக கடை உரிமையாளர் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 100 திருக்குறளை பிழையில்லாமல் ஒப்பித்தால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சுக்கா, பொரித்த கறி என மெகா அசைவ விருந்து முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். காற்றில் பிரியாணி வாசம் பரவுவது போல இவரது இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.