கொரோனா தொற்று காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் அதிகளில் சென்னையில் இருந்து கிளம்பினார். வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்டம் தாண்டி தான் செல்ல வேண்டும்.
திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்வதாக இருந்தாலும் , சேலம், ஈரோடு, கோவை, செல்வதாக இருந்தாலும் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாண்டி தான் செல்ல வேண்டும்.
நேற்று இரவு முதல் அதிகமான வாகனங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எழுந்ததால் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தி வாகனங்கள் அனைத்தும் இலவசமாக அனுமதிக்கின்றார்கள்.