Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலையில் சுவையான சிறந்த உணவு உளுந்தம் கஞ்சி..!!

காலையில் நாம் இந்த உளுந்தம் கஞ்சியை சாப்பிட்டால் உடலுக்கு அத்தனையொரு புத்துணர்ச்சி:

உளுத்தம் பருப்பு உடலின் வலிமையை அதிகரித்து பலத்தை ஏற்படுத்தும். அத்தகைய உளுத்தம் பருப்பை நாம் அனைவரும் இட்லி, தோசை, வடை என செய்வதற்கு பயன்படுத்துகிறோம்.

ஆனால் இதனைக் கொண்டு காலை வேளையில் கஞ்சி செய்தும் சாப்பிடலாம். அதுமட்டும் இல்லாமல் தித்திப்பாக வேண்டுமென்றால் வெல்லம் அல்லது  கருப்பட்டி போட்டும் சமைத்து பால் ஊற்றி சாப்பிடலாம்..

தேவையானவை :

சுக்கு பொடி                            – 1 டீஸ்பூன்

உப்பு                                           – தேவையான அளவு

துருவிய தேங்காய்              – 1/2 கப்

பால்                                             – 1/2 லிட்டர்

அரிசி                                          – 1 கப்

உளுத்தம் பருப்பு                  – 1/2 கப்

பூண்டு                                        – 10 பற்கள்

வெந்தயம்                                – 1 டீஸ்பூன்

தண்ணீர்                                   – 5 கப்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேகவைக்கவேண்டும்.

உளுந்தும், அரிசியும் பாதியளவு வெந்து வரும் பொழுது, அத்துடன் பூண்டு, வெந்தயம் போட்டு வேகவிடவும்.

நன்றாக கஞ்சியை வேக விடவேண்டும். பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்க வேண்டும். மிதமான சூட்டில் சாப்பிடுங்கள். ருசியே தனி.. உளுந்து கஞ்சி ரெடி!!இதனை ஏதேனும் துவையலுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

 

 

 

 

Categories

Tech |