ருசியான உளுந்தம் சோறு…
தேவையான பொருட்கள்:
1. வெந்தயம் – 2 டீஸ்பூன்
2. பூண்டு – 2
3. தேங்காய் – துருவியது
4. உப்பு – தேவையான அளவு
5. உளுந்து – 1\4 கிலோ
6. புழுங்கல் அரிசி – 1\2 கிலோ
7. சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கும் வரை அடுப்பில் வைக்கவேண்டும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வருது வைத்து கொள்ளவும். தேங்காய் துருவி கொள்ள வேண்டும். வெந்தயம் , சீரகம் அதையும் வருது கொள்ள வேண்டும் பொன்னிறமாக. பூண்டு பற்களை உரித்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் தண்ணீர் நன்றாக கொதிக்கும்பொழுது அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை அதில் போடவேண்டும். அப்புறம் உளுந்து தண்ணியோடு சேர்த்து கொதிக்க ஆரம்பிக்குபொழுது வெந்தயம் மற்றும் சீரகம், உறித்து வைத்திருக்கும் பூண்டு ஆகியவைகளை அதி போட வேண்டும்.
அதனுடைய சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கி நன்கு தண்ணீர் கொதிக்கும். அப்போது அரிசியை நன்றாக கழுவி உலையில் போடா வேண்டும், அது பத்தி அளவு எல்லாம் வெந்து வரும்பொழுது துருவிய தேங்காய் போட்டு நன்றாக கிளறிவிட வேண்டும்.
தண்ணீர் குறைந்த அளவே வைக்க வேண்டும் , அப்போதுதான் சோறு பூ போல உதிரியாக சரியான தரத்திற்கு வரும். நமக்கு தேவையான அளவு உப்பு போடா வேண்டும்.
எல்லாம் சேந்து ஒன்றாக வெந்து வரும் அப்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள், அப்போது அந்த பாத்திரத்தை முழுமையாக மூடிவைக்க கூடாது. மூடி அரை பானை அளவில் இருக்குமாறு வைக்கவேண்டும்.
ருசியான உளுந்தம் சோறு, இதில் கருவாட்டு குழம்பு , வெந்தய குழம்பு ஆகியவைகளை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.. இன்னும் ருசி அதிகரிக்கும்..