Categories
உலக செய்திகள்

மதங்கள் அனைத்தையும் மதிக்க வேண்டும்… அப்போது தான் ஒற்றுமையாக வாழலாம்…. ஐ.நா கருத்து…!!!

ஐநா அமைப்பு, மதங்கள் அனைத்தையும் மதித்து வாழ்ந்தால் அனைத்து மக்களும் ஒற்றுமையாக அமைதியுடன் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.

ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்ற நபர், கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இரண்டு பேரால் கொலை செய்யப்பட்டார். மேலும், அவர்கள் இருவரும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டனர். இதனால், அந்த பகுதியில் வன்முறை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐ.நாவின் பொது செயலாளரின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்ததாவது, உலக நாடுகளில் இருக்கும் மதங்கள் அனைத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும். அவ்வாறான சமூகம் நிச்சயம் தோன்றும் என்று ஐநா நம்புகிறது என்று கூறி இருக்கிறார்.

Categories

Tech |