அமிதாபச்சன் தனது மருமகள் மற்றும் பேத்தி வீடு திரும்பியதை என்னி ஆனந்த கண்ணீருடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் 17 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அமிதாபச்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களாக மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாபச்சன், நேரம் கிடைக்கும்போது கொரோனவால் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.
தனிமை வார்டில் இருந்தால் ஒரு நோயாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவர் முதல் செவிலியர்கள் வரை மருத்துவ பாதுகாப்பு உடைகளை அணிந்திருப்பதால் ஒருவாரம் யாரையும் பார்க்காமல் இருப்பது நோயாளியின் மன நலனை பாதிக்கும் எனவும், இந்த வாய்ப்பினை நான் இரவில் பாடுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் எனவும் எழுதியுள்ளார். தற்சமயம் மருமகளும் பேத்தியும் மருத்துவமனை வாசத்திலிருந்து வீடு திரும்பிய மகிழ்ச்சியினை ஆனந்த கண்ணீருடன்.” என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இறைவா உன் ஆசீர்வாதங்கள் எல்லையற்றவை” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.