Categories
உலக செய்திகள்

”இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடியுங்கள்” ஐநா வலியுறுத்தல் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

Image result for UN General Secretary Antonio Guterres

மேலும்,இந்தியாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் பேசுகையில், ஐ.நா. பொதுச்செயலாளர், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கவலையுடன் பார்த்து வருகின்றார். அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |