Categories
உலக செய்திகள்

வறட்சியை சந்திக்கவுள்ள நாடுகள்…. பட்டியல் வெளியிட்ட ஐ.நா…. அதிர வைக்கும் தகவல்…!!!

வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஐ.நா சபை நேற்று உலக அளவில் வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளுடைய பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று ஐநாவின் பாலைவனமாதல் வறட்சி தினம் பின்பற்றப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், அங்கோலா, பிரேசில், சிலி, எத்தியோபியா, ஈராக், ஈரான், கஜகஸ்தான், மாலி, லெசோதோ, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, மடகாஸ்கர், அமெரிக்கா, சாம்பியா, பாகிஸ்தான், தெற்கு சூடான், சிரியா போன்ற நாடுகள் இடம் பெற்றிருக்கிறது.

வரும் 2050ஆம் வருடத்திற்குள் 40 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் உடனே புனரமைப்பு செய்ய வேண்டும். பூமியில் சுமார் 40% நிலப்பரப்பு அழிந்து கொண்டிருக்கிறது. எனவே, மனிதர்களும், உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமும் பாதிப்படையும் நிலை ஏற்படும். இந்த நவீன உலக வரலாற்றிலேயே, இவ்வாறான சவாலை எதிர்கொண்டது கிடையாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |