மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என ஐநா செயலாளர் கூறியுள்ளார்
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஒரு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியிருப்பதாவது, “தொற்றிற்கு எதிராக பயன்படும் படியான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டுவர பெரிதும் உதவும்.
கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற இயலும். எனவே அனைத்து நாடுகளும் தடுப்பூசியை 2020ம் ஆண்டுக்குள் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.