Categories
உலக செய்திகள்

ஆப்கான் மக்களை ஏத்துக்கோங்க… நாடுகடத்தாதீங்க… ஐ.நா பொதுச் செயலாளர்.!!

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்..

ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது .. அந்நாட்டிலுள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகி விட்டது.. அந்நாட்டு மக்கள்  காபூல் விமான  நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று நிற்கின்றனர்..

நிறைய பேர் அங்கிருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு சென்று விட்டனர்.. இதனிடையே அங்கு விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.. மக்கள் வெளியேறுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அமெரிக்கா. நாளை முதல் விமான சேவையை முழுவதுமாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Afghanistan president Ashraf Ghani fled from Taliban 'in four cars and helicopter  filled with cash' | Daily Mail Online

இதனிடையே அங்குள்ள மக்களின் நிலை என்னவென்று உலக நாடுகள் பல கவலை தெரிவிக்கின்றன.. ஏனென்றால் அங்கு பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதிப்பார்களாம்.. ஆம் 1996 முதல் 2001 வரை தலிபான் ஆட்சியில் இருக்கும் போது, அதுவும் குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்லவோ, பள்ளியில் படிக்கவோ கூடாது .. ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.. பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்..  ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என இப்படி பல கட்டுப்பாடுகள்.. மீறினால் இஸ்லாமிய சட்டத்தின் மிக கடுமையான விதிகளின் கீழ் தண்டிப்பார்களாம்.. அதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் பயந்து போய் உள்ளனர்.. அதனால் வெளியேற துடிக்கின்றனர்..

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. யாரையும் நாடுகடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்”  என்று ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |