கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொன்று விடும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது இத்தாலி அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. உலக நாடுகள் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா குறித்து மென்பொருள் வழியிலான முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்தோனியா குட்டர்ஸ், கடந்த 75 ஆண்டுகால ஐ.நாவின் வரலாற்றில் இத்தகைய உலக சுகாதாரப் பிரச்னையை சந்தித்தது கிடையாது என்று கூறினார்.
மேலும் உலகளாவிய தொற்று என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரசை எதிர்க்க உலகின் வல்லரசு நாடுகள், பொருளாதார வலிமைமிக்க நாடுகள் ஒன்றுபட்ட உறுதியான கொள்கையுடன் போராடவேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.