Categories
உலக செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள்.. வெளியான தகவல்..!!

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் 5 நாடுகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

ஐநா சபையில் உறுப்பினர்களாக சுமார் 193 நாடுகள் இருக்கிறது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக போகும் நாடுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தல் மூலம்  தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு கவுன்சிலில் சுமார் 15 நாடுகள் உறுப்பினர்களாக  இருக்கிறது.

இதேபோன்று நிரந்தரமற்ற இரண்டு வருடங்கள் இயங்கும் 5 உறுப்பினர் நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2022ஆம் வருடத்திலிருந்து 2023 ஆம் வருடம் வரை செயலாற்றக்கூடிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றிருக்கிறது.

இதில் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாக கானா, பிரேசில், கபான், அல்பேனியா மற்றும் அமீரகம் போன்ற நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிரந்தரமற்ற பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் கடந்த 1986 ஆம் வருடத்திலிருந்து 1987 ஆம் வருடம் வரை அமீரகம் உறுப்பினர் நாடாக முதன் முதலாக இருந்துள்ளது. அதன்பின்பு தற்போது இரண்டாவது தடவையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |