மன அமைதி இன்றி இருப்பதற்கான காரணம் ஆராய்ந்து அறி சரியாக சிந்தித்து செயலாற்றினால் உன்னால் எச்சூழலையும், மாற்ற இயலும்.
எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல வரிகளின் கோர்வையே வாக்கியம் ! வலிகளின் கோர்வையே வரலாறு ! வாழ்வில் முடிவென்று ஏதுமில்லை, எல்லாம் திருப்புமுனைகளே, உன்னை திருப்பும் வினைகளே! உனக்கு முன் வாழ்ந்த போராளிகள், எதிர்ப்பால் வாழ்ந்தவர்களை விட எதிர்பாலினத்தால் எதிர்பார்த்தால் விழுந்தவர்களே அநேகம். அடித்து விளையாடுவதை விட, தடுத்து விளையாடு! வெளிப்புறம் கண்டு தீர்மானித்து விடாதே! பருவத்தில் பன்றியும், அழகுதான். சமூகத்தின் கழிவுகளை மனதிலிருந்து கலை. என்றும் உனக்கு வேண்டியவற்றில் நிலை ! நீ சில அடிப்படை கல்வியை கருவில் இருக்கும் பொழுதே கற்க தவறிவிட்டாய் ! கடமையை செய்பவர்களை காதலி, கடமைக்கு செய்பவர்களை வேறு பிறி ! சிரித்துப் பேசுவதைவிட சிந்தித்துப் பேசு ! உன் குழப்பம் விலக்கு.
எல்லோரும் அவரவர் தேவையின் தெளிவோடு இருப்பதே, உனக்கான ஒளிரும் விளக்கு ! மறைவாய் இருப்பது எதுவோ அது மகத்துவம் பெறும் ! காரணங்களும் விளக்கமும் கூறினால் நீ போருக்கானவன் அல்ல, பொழுதுபோக்குக்கானவன். ஆயிரம் அடி பாதை மலை என்று மலைத்துவிடாதே, முதல் அடி எடுத்து வை ! வேகமாக ஓட, தனியே ஓடு ! நீண்ட தூரம் ஓட, தனித்துவத்தை இணைத்துக்கொண்டு ஓடு விளக்கம் கொடுத்து யாரையும் உடன் வைக்காதே ! உனக்கு தகுதிகள் இல்லையேல் ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும், அரை நொடியில் எல்லாம் மறக்கடிக்கப்படும் ! உண்மை அன்பு கடமையை மட்டும் ஆற்றும். உன்னை நம்பியவற்றில் நீ உண்மையாய் இருந்தால், நீ நம்புவது உனக்கு நன்மையாய் இருக்கும் ! மனதை அமைதி அடைய செய்யாதே ! மன அமைதி இன்றி இருப்பதற்கான காரணம் ஆராய்ந்து அறி. சரியாக சிந்தித்து செயலாற்றினால் உன்னால் எச்சூழலையும், மாற்ற இயலும்.