Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதையா இருந்துக்கோங்க….. 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் – ஐ.நா எச்சரிக்கை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்பிரிக்க கண்டத்தை ஐநா எச்சரித்துள்ளது

ஆப்பிரிக்கா கண்டத்தில் பிப்ரவரி 14 அன்று முதல் கொரோனா பாதிப்பு எகிப்தில் பதிவானது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்தது அல்ஜீரியா. அதனைத் தொடர்ந்து எகிப்து, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா உள்ளது. தொற்றின் காரணமாக ஆப்பிரிக்காவில் 3 லட்சம் முதல் 33 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என ஐநா ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வைரஸ் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்கா செயல்படுத்தாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 கோடியை தொட கூடும். அதேநேரம் சமூக விதிகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமும் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் 12.2 கோடியாக பாதிப்பின் எண்ணிக்கை குறையக் கூடும் என ஐநா ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு தொற்று பாதிப்பின் அடுத்த மையமாக ஆப்ரிக்கா மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்றவாரம் ஆப்பிரிக்கா கண்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் குறைவுதான் ஆனால் பாதிப்புகள் விரைவாக அதிகரிக்க கூடும் என கணிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் இந்த வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |