ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது, ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அடைய வைத்துள்ளது. சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், இறுதிகட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்றே கருதி வந்தனர்.இந்த நிலையில்தான் சென்னையின் தோல்வியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
தோல்வி குறித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில், வாய்ப்பை தவற விட்டது குறித்து எவ்வளவு வலித்தாலும் கூட நாம் சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் கடினமான சூழலில் நம்மை பீதி அடையாமல் காக்கும். இந்த தோல்வி வலிக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி கடினமாக சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை ஆனால் இந்த முறை அது எங்களுக்கு சரியாக கை கூடவில்லை கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்து விட முடியாது என தெரிவித்துள்ளார்.