தேனி மாவட்டத்தில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் பூதிப்புரத்தை கிராமத்தில் வைரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிகாரிகா(19) தற்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகாரிகா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை.
இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்து பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் நிகாரிகா ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.