அமெரிக்காவின் புதிய விதிமுறைகளால் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்
உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பல உயிர்களை எடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு இழப்புகளை சந்தித்துள்ளது. இன்னிலையில் கொரோனா பாதிப்பினால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களுக்காக முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
அவர் பணிகளை முடித்து விட்டு இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்தியா வருவதற்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிற்கு வர முடியாத போதிலும் அலுவலகத்தின் முக்கிய சந்திப்புகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் நடத்தி வருவதாக தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் சுனில் ஆராரோ உள்ளிட்ட அலுவலர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தில் இருந்து 30 சதவீத தொகையினை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவதற்கு முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.