ஏடிஎம் மையத்தில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி உள்ளது. இந்த வங்கியில் சம்பவத்தன்று ஏடிஎம் மையத்தின் காவலாளி இல்லாத நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளது. ஆனால் பணத்தை திருட முடியாததால் ஏடிஎம் மிஷினை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணையில், கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஏடிஎம் மெஷினை மட்டும் வேறு வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர் என்பது கண்காணிப்பு கேமராவில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கியின் சார்பாக அந்த ஏடிஎம் மிஷினில் இரண்டு லட்சம் ரூபாய் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் பணம் இல்லாததால் மெஷினையே தூக்கி சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.