Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உனக்கு பணம் தர முடியாது…கூறிய தாய்… மகன் செய்த கொடூர செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 தருவதை அவர் அறிந்தார். தன்னுடைய தாய் முத்தம்மாளும் அதனை வாங்கி இருப்பதை அறிந்த அவர் தனக்கு மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் தாய் முத்தம்மாள் தரமுடியாது என்று கூறினார். இதனால் மிகவும் கோபமடைந்த ரத்தினவேல் தனது தாய் என்றும் பாராமல் முத்தம்மாளை கடுமையாக தாக்கி தரையில் தள்ளிவிட்டார்.

இதனால் முத்தம்மாள் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். மது அருந்த பணம் தராததால் தாயை, மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |