Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான்…. தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை  நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகளின் மேல் சிறிய ரக கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கியால் சுட்டு தங்களின் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இணையாக  இந்தியாவும் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.

Categories

Tech |