நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திறந்திருந்த 3 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில கடைகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனுமதி பெறாமல் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் திறந்திருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி திறந்த 2 சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாண்டமங்கலத்தில் அனுமதியின்றி திறந்த பெயிண்ட் கடைக்கும் சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் இருந்து 5,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.