ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர்.
அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது அதில் இரண்டு கிலோ கொக்கைன் என்னும் போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த காரிலிருந்த இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, “இவ்வளவு போதைப்பொருளைக் கடத்தியது மட்டுமல்லாமல், அதனை மறைப்பதற்கு கொஞ்சம் கூட சலனமில்லாமல், சாதாரணமாக இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது” என்று கூறியுள்ளனர்.