ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் உள்ள குழந்தையையும் குடும்பத்தினரோடு சேர்த்து வருமான வரி விலக்கை பெற முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் இருக்கும் குழந்தையையும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியும். கடந்த மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்படி இந்த வருடத்திற்கான $3,000 என்ற மாநில வருமான வரியில் விலக்கு பெற முடியும். எனினும், வரி செலுத்துபவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நாட்டின் வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அரிசோனா மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் ”கருவின் ஆளுமை சட்டம்” கொண்டு வந்திருக்கின்றன. அதன்படி, தாயின் வயிற்றில் கரு தோன்றிய நிமிடத்திலிருந்து, முழு அரசியல் அமைப்பு உரிமைகளை பெறக்கூடிய நபராக கருதப்படுகிறது. மேலும் ஜார்ஜியா நாட்டில் கரு கலைப்பிற்கு தடை சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.