விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயமில்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதன்படி பிக் பாஸில் தற்போது போட்டியாளர்கள் அவர்களது கண்ணீர் கதையை கூறி வருகிறார்கள். நேற்று டான்ஸ் மாஸ்டர் அவரது கதையை சொல்லி இருக்கிறார். அதாவது, “எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடை குட்டி தான் என்பதால் பெற்றோருக்கு என் மீது அதிகமாக எதிர்பார்ப்பு. ஆனால் சின்ன வயதிலே எனக்கு போலியோ அட்டாக். கால் சரியாக வரவில்லை. அதன் பிறகு அப்பாவின் முயற்சியால் தான் அது சரியாகி நடனத்திற்கு உள்ளே வந்தேன். மற்றவர்களை போல எனக்கு கால் வந்தது.
அதனைத் தொடர்ந்து பெயரை சொல்ல விரும்பவில்லை, அவரை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்ததும் பிரிந்துவிட்டோம். அது ஏன் என எனக்கு தெரியவில்லை. எனக்கு Knowledge இல்லை என்று அவர் கூறினார். நான் சுத்தமாக படிக்கவில்லை. என் மகளுக்கு நான் அப்பா என தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. என் முதல் மனைவியை இன்னொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் என் மகளுக்கு நான் தான் அப்பா என இறந்த பிறகாவது சொல்லுங்க. இந்த ஷோவை அவரும் பார்ப்பார், தெரிந்து கொள்வார் என்பதற்காக தான் நான் இந்த ஷோவுக்கே வந்தேன். இரண்டு வயது வரை குழந்தையை பார்த்திருக்கிறேன். அதன் பிறகு 7 வயதில் ஒரு முறை ஸ்கூட்டரில் கூட்டி வந்தார். என்னை பார்த்து ‘அங்கிளுக்கு ஹாய் சொல்லு’ என முதல் மனைவி சொல்ல மகளும் என அங்கிள் என கூறிவிட்டு போனார். அதெல்லாம் மிகப்பெரிய வலி என்று அவர் வேதனையை தெரிவித்துள்ளார்.