சுவிட்சர்லாந்தில் சுமார் 300 குடிமக்களுக்கு புதிய முயற்சியாக நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புதிய முயற்சியாக நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் பெர்ன் நகரில் உள்ள 300 குடிமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் தங்களது பெயர் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யலாம் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11-ஆம் தேதி அன்று இந்த கோரிக்கையானது பெர்ன் நகரின் ஒன்பது அரசியல் கட்சிகள் சார்பில் நகர சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது..
அதனைத் தொடர்ந்து சுமார் 300 குடிமக்களுக்கு புதிய முயற்சியாக நிபந்தனையற்ற அடிப்படை வருமானம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.. அதோடு மட்டுமில்லாமல் சுமார் 9 மில்லியன் பிராங்குகள் வரை இந்த திட்டத்திற்காக செலவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.