புதிய கொரோனா வைரஸ் இளம் தலைமுறையினரை அதிக அளவில் குறி வைப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பரவி வரும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனாவால் 70 சதவீதம் அதிக அளவில் பரவுவதால் பிரிட்டன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதிப்பு தினசரி 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நான்காவது நாளாக நேற்றும் 50 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 53,285 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 25 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20க்கும் கீழான தலைமுறையினர் மட்டுமே புதிய கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா மேற்கொண்டு பரவுவதை தடுக்க தடுப்பூசி போடும் பணிகளை பிரிட்டன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.