திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நாட்டில் ஒரு மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனாதானத்திற்கு எதிரான போர். இந்த சனாதானத்திற்கு எதிரான போரில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பது தான் இன்னைக்கு முக்கியமான விஷயம்.
குறிப்பாக லட்சியமா ? எண்ணிக்கையா ? என்று பார்த்தால் நிச்சயமாக லட்சியம் தான் முக்கியம். எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணிக்கை தான் முக்கியம் என்று கருதி இருந்தால், இந்த அணியில் இருக்கிற கட்சிகள் கருதி இருந்தால் விலகிப் போய் இருக்கலாம். மதத்திற்கு எதிராக வெறுப்பு ஊட்டுகின்ற பேச்சுகளை பேசுகிறார்கள்.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு. நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சொல்வது உச்சநீதிமன்றம். ஆளுகிற கட்சி என்று சொன்னால், ஒன்றியத்தில் ஆளுகின்ற கட்சி. அந்த கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் எல்லாரும் பேசுகிற பேச்சு நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சு.
இந்தி மொழி திணிக்கப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்து இருக்கின்றன. ஒரே ஒரு கட்சி அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சி ஆதரிக்காதது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.