உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதனால் அயோத்தி நகரில் தீப விளக்குகளை ஏற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி 15.76 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
கடந்த வருடம் அயோதியில் 9 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட நிலையில், தற்போது 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட பிறகு அதற்கான சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்பட்டது. மேலும் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் ஆவாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்தனர்.